தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

திருவிழா

Update: 2024-09-10 03:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், குத்தகைதாரர்கள் சார்பில் கட்லா, கெண்டை, ரோகு, விரால் உட்பட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, நன்கு வளர்ந்ததும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற உள்ளதாக நேற்று முன் தினம் தகவல் பரவியது. இதையொட்டி, தண்டலை, சங்கராபுரம், வாணியந்தல், பெருவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பெரிய ஏரியில் திரண்டனர். அங்கு தண்ணீரில் இறங்கி, வலை மற்றும் சேலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். 1 டன் எடை கொண்ட கட்லா, கெண்டை, ரோகு உட்பட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. பிடித்த மீன்களை மூட்டைகளில் கட்டி பொதுமக்கள் துாக்கி சென்றனர். ஒரு சிலர் அப்பகுதியிலேயே விற்பனை செய்தனர்.

Similar News