தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
மூன்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு!
மூன்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாதூர் மேல்நிலைப்பள்ளி, கூவத்தூர் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு மேல்நிலைப்பள்ளி மூன்று பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் சுஜாதாபாரதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பாரதிபாபு திருவாதூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, ஒன்றிய பெருந்தலைவர் சாந்திராமச்சந்திரன், கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.