பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய எம்எல்ஏ
தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்.எண்டத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் தம்பு, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் திமுகவில் பவள விழா நிறைவை ஒட்டி வீடுகள் தோறும் கட்சி கொடிகள் பறக்க வேண்டுமென முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரை வழங்கியதன் பேரில் இன்று இல்லம் தோறும் திமுக கொடி பறந்திடும் வகையில் வீடுகளில் இரு வண்ணக் கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மாலதி, உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.