விருத்தாசலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
அமைச்சர் சி. வெ. கணேசன் பங்கேற்பு
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் ஞானமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் பாரி இப்ராஹிம் தீர்மானங்களை வாசித்தார். முன்னதாக இளைஞர் அணி அமைப்பாளர் நடராஜன் வரவேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் முத்து, சாரங்கபாணி மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், பச்சமுத்து, வெங்கடாஜலபதி, ஆத்மா குழு தலைவர் குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, பொறியாளர் அணி செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி ராஜலட்சுமி, கவுன்சிலர் குணசேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மங்கலம்பேட்டை பேரூர் கழக செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.