மூலனூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் பராமரிக்கும் பணி
மூலனூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் பராமரிக்கும் பணி
மூலனூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் பராமரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் கோட்டம் - மூலனூர் உட்கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சாலையின் இருபுறங்களிலும் செடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் பராமரிப்பு பணிகளுக்கு கவணம் செலுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் தலைமைப்பொறியாளர் அறிவுரைகளின் படி மூலனூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள புற்கள், செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. புதர்கள் அகற்றும் பணியானது JCB இயந்திரம் மற்றும் புற்கள் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூலனூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் பராமாிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.