கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் மற்றும் எம்பி இடம் வாழ்த்து பெற்ற தலைமையாசிரியர் .

கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் மற்றும் எம்பி இடம் வாழ்த்து பெற்ற தலைமையாசிரியர் .

Update: 2024-09-10 15:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் மற்றும் எம்பி இடம் வாழ்த்து பெற்ற தலைமையாசிரியர் . திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் எம்.பாரதி.இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியினை துவங்கி கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி வருகிறார் .இவர் பணிபுரிந்து வரும் கன்னிவாடி போன்ற சிறிய கிராமத்தில் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் தவறாது பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதில் மிகச்சிறந்த வகையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தனது சொந்த செலவில் வாகன வசதி ஏற்பாடு செய்து பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் பயில வைக்கும் பணியினை இடைவிடாது செய்து வருகிறார். மேலும் பள்ளி மேம்பாட்டுக்காக அரசு நிதி கிடைக்காத பட்சத்திலும் தனது சொந்த நிதியின் மூலமாக பள்ளிக்கு கம்பி வேலி அமைத்து மாணவ மாணவியருக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற அறப்பணிகளையும் சிறப்பாக செய்தார். மேலும் இந்த சிறந்த பணியினை செய்த தலைமை ஆசிரியர் எம்.பாரதி இந்த சேவையை பாராட்டும் விதமாக சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம் .பாரதி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தார்.இதை தொடர்ந்து நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் மற்றும் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரை நேரில் சந்தித்து கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.பாரதி வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் சாமிநாதன் நல்லாசிரியர் விருது பெற்ற எம்.பாரதி தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி, கன்னிவாடி பேரூர் கழக திமுக செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News