கருவேப்பிலங்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலை உயர்வை கண்டித்து நடந்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுங்கத்துறை விலை உயர்வு மற்றும் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட பொறுப்பு செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ரவி, வேல்முருகன், இளந்தென்றல், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை, நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், நிதி உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ரமேஷ், விநாயகமூர்த்தி, செல்வராசு, பிச்சமுத்து, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.