ஏழு விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
குத்தாலத்தில் பிரதிஷ்டை செயயப்பட்ட 7 விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காவிரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடெங்கும் கடந்த 7ஆம்தேதி கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் 395 விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கட்நத 7ஆம்தேதி முதல் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோயில்களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகள் இன்று இரவு மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. ஏழு சிலைகள் குத்தாலம் கடைவீதிக்கு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக காவிரி தீர்த்த படித்துறைக்கு கொண்டுவரப்பட்டு சிலைகள் பக்தர்களின் பக்தி முழங்கங்களோடு விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.