ஒன்பது நாள் நோன்பு ஜெயின் இளைஞருக்கு மரியாதை

மயிலாடுதுறையில் 9 நாட்கள்  உண்ணாநோன்பு கடைப்பிடித்த ஜெயின் இளைஞரை அச்சமுதாய மக்கள் சாரட் வண்டியில் ஜெயின் கோயிலுக்கு அழைத்துச் சென்று வரவேற்பு:- ஊர்வலத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்பு

Update: 2024-09-11 03:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் ஜெயின். இவர் ஜெயின் சமுதாயத்தில் வருடம்தோறும் கடைபிடிக்கப்படும் முக்கிய நோன்பான  பருவ நோன்பை கடந்த மாதம் 31ஆம் தேதி முதல் இம்மாதம் 8-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கடைப்பிடித்தார். நோன்பு காலத்தில் அவர் பகல் நேரங்களில் சுடுதண்ணீர் தவிர வேறு எந்த ஆகாரமும் அருந்தவில்லை. இந்நிலையில் நோன்பு முடிவடைந்ததை தொடர்ந்து, ரமேஷ் சந்த் ஜெயினை அச்சமுதாய மக்கள் சாரட் வண்டியில் அமர்த்தி, மயிலாடுதுறை முதலியார் தெருவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து சென்று மரியாதை செலுத்தினர். முன்னதாக ரமேஷ் ஜெய் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரினார். இந்த ஊர்வலத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், வர்த்தக சங்க பிரமுகர்கள் மற்றும் ஜெயின் சமுதாய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News