தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உங்களது கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக விசாரணை செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரம் வட்டாட்சியர் திரவியம், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கோபால்,மண்டல துணை வட்டாட்சியர்கள் செந்தில் பிரபு மற்றும் ராதா, நில வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.