கீரனூரில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அடாவடி தரைக் கடைகளுக்கு வாடகை வசூல் செய்வதாகவும், கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று வணிகர் சங்கம் சார்பாக தெரிவிக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட தரை கடைகளுக்கு கூட நாள் ஒன்றுக்கு ரூ 3 வீதம் 10 சதுர அடிக்கு 30 ரூபாய் வாங்குவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்