ஆண்டிபட்டி ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்னெறிபடுத்துதல் நிகழ்ச்சி
கல்லூரி நிர்வாகத் தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிபட்டி ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்னெறிபடுத்துதல் நிகழ்ச்சி. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்னெறி படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகத் தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவ ,மாணவிகளின் பெற்றோர்கள், விவசாயிகள் ,முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் பெற்றோர் குத்துவிளக்கு ஏற்றி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக சர்வதேச தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நன்னெறி, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் தேவைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் டாக்டர் பிரமிளா, ருஜ்வானா மற்றும் துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.