சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்
மதுராந்தகம் அருகே கூலி தொழிலாளர்கள் சமையல் செய்யும் பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்
மதுராந்தகம் அருகே கூலி தொழிலாளர்கள் சமையல் செய்யும் பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு புதியதாக கட்டி வரப்படுகிறது... இந்தப் பணியானது கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வருகிறது.. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.. இப்பணி 60% முடிந்துள்ள நிலையில் கூலி தொழிலாளர்கள் இங்கேயே தங்கி உள்ளதால் இன்று காலை சமையல் செய்யும் போது கேஸ் சிலிண்டர் வெடித்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரிமளம் (வயது 52), முத்துக்குமரன் (வயது 36) ஆகிய 2 பேர் தீக்காயமடைந்தனர்.. உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.தீக்காயம் அடைந்த இருவரை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.