விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு பாமக சார்பில் புகழஞ்சலி.

விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு பாமக சார்பில் புகழஞ்சலி.

Update: 2024-09-11 11:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு பாமக சார்பில் புகழஞ்சலி. ராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பிறந்தவர் இமானுவேல் சேகரனார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றே இவர், "வெள்ளையனே வெளியேறு" என்ற இயக்கத்திலும் போராடி சிறை சென்றவர். இந்திய ராணுவத்தில் தரைப்படையில் பணியாற்றியவர். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் தலைவரும் ஆவர். இவர் கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அவரது நினைவை போற்றும் வகையில் அரசியல் கட்சியினரும், ஒடுக்கப்பட்ட மக்களும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தில், கரூர் பேருந்து நிலையம் அருகாமையில் அமைக்கப்பட்ட மேடையில் இமானுவேல் சேகரனார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், தாந்தோணி ஒன்றிய செயலாளர் தமிழ் மணி, கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சட்டப் பாதுகாப்பு அணியின் செயலாளர் வழக்கறிஞர் யுவராஜ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

Similar News