பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ ஆலோசனை
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் - க. சுந்தர் எம்எல்ஏ, தொண்டர்களுக்கு வேண்டுகோள்
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வைத்து தளபதி அவர்களை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் - க. சுந்தர் எம்எல்ஏ, தொண்டர்களுக்கு வேண்டுகோள்! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் அச்சரப்பாக்கம் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பொன் சிவகுமார், பேரூர் செயலாளர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது குறித்தும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், திராவிட மாடலா ஆட்சியின் சிறப்புகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் சுவர் விளம்பரங்கள் வரைவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் நலிவுற்ற திமுகவினர் மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டு உடல்நல குறைபாடு ஏற்பட்ட திமுகவினர் மற்றும் உயிர் இழந்த திமுக குடும்பத்தினர் எட்டு நபர்களுக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.