கல்வித்துறையின் கோட்பாடு சரியாக இருக்க வேண்டும். பூரண மதுவிலக்கிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது.

பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பேட்டி.

Update: 2024-09-11 12:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாதகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என் எஸ் பழனிச்சாமியின் மணிமண்டபத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் இன்று வருகை புரிந்தார். மேலும் அவர் என்ன பழனிச்சாமி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான விஷயங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனென்றால் கொலை கொள்ளை போதை பொருட்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதேபோல் கல்வித்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவைப்படுகிறது அதன் அடிப்படையில் தான் மாணவர்கள் இந்தியாவை உருவாக்க முடியும் எனவே புதிய கல்விக் கொள்கை என்பது வருங்கால மாணவர்கள் நலனை சார்ந்தது. தொடர்ந்து மகாவிஷ்ணு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பள்ளி கல்லூரிகளிலே ஒரு பொதுவான கோட்பாடு தேவை ஜாதி மதம் இனம் மொழி இவைகள் எல்லாம் இருக்கக்கூடாது. மாணவர்களை பொறுத்தவரையிலே மிக முக்கியமாக கல்வியோடு சேர்ந்து நல்லொழுக்க கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து கிடையாது அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மாறாக எந்த கோட்பாடும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியலை புகுத்தி கைது செய்வதை தவிர்க்க வேண்டும். விசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு போராட்டத்தில் தாமாக கலந்து கொள்ளுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் பூரண மதுவிலக்கு தான் தமிழ் மாநில காங்கிரஸின் முக்கிய நோக்கம். இதற்காக ஒரு கோடி கையெழுத்தை பெற்று ஆளுநரிடம் கொடுத்த இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் எனவே தொடர்ந்து மதுவிலக்கு அமல்படுத்த தனிப்பட்ட முறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருகிறது. அதேபோல் பல்வேறு நிலைகளில் ஆர்ப்பாட்டம் போராட்டம் தாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். மேலும் போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளுமா என கேள்வி எழுப்பியதற்கு தமிழ் மாநில காங்கிரஸிற்கு தனித்தன்மை உண்டு அதனை நாங்கள் மது கொள்கையிலே வெளிப்படுத்துவோம் அதில் எவ்வித மாற்று கருத்து கிடையாது என்று அவர் தெரிவித்தார். மேலும் விசிகா சார்பில் அதிமுகவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு அதற்கு அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கூறினார். அதேபோல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பு கையில் கல்வித்துறையின் கோட்பாடுகள் முறையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் அதேபோல் தனிமனித ஒழுக்கம் எல்லோருக்கும் அவசியம் மேலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்களை 24 மணி நேரத்தில் கண்டறிந்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் தொடர் கோரிக்கை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Similar News