மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

Update: 2024-09-11 17:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் கடந்த 7 ந் ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில், இந்து முன்னணி சார்பில், மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மங்கலம்பேட்டை, ரூபநாராயண நல்லூர், பள்ளிப்பட்டு, கோ.பூவனூர், புல்லூர், எம்.அகரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 26 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மங்கலம்பேட்டை ஓட்டைப் பிள்ளையார் கோயில் அருகில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை, பாஜக பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்று வந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமானது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ரூபநாராயண நல்லூர் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில், பாஜக மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் ஓபிசி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ், மாவட்டத் தலைவர் மணிகண்டன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், பிரச்சாரப் பிரிவு மாநில செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், இந்து முன்னணி நகர தலைவர் கமலக்கண்ணன், பாஜக ஒன்றிய தலைவர் பரமசிவம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழாக்குழு கோவிந்தன், யோகேந்திரன் உட்பட விழாக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் விருத்தாசலம் கிரியா சக்தி, சேத்தியா தோப்பு ரூபன்குமார், மாவட்ட குற்றப்பிரிவு ராமதாஸ், நெய்வேலி சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் மங்கலம்பேட்டை சந்திரசேகரன், விருத்தாசலம் முருகேசன், 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 26 சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட 475 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News