விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தன் கழுத்தை துணியால் நெரித்துக்கொண்டு தற்கொலை
விருத்தாசலம் போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (46). இவருக்கும் கம்மாபுரம் அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கும் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஏனெனில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக பிரிந்து தனது சொந்த ஊரான எருமனூரில் வசித்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த ஏழு வருடமாக காசநோய் இருந்து வந்த நிலையில் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 9ஆம் தேதி அன்று நோயால் அவதிப்பட்ட அவரை உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மூச்சு விட சிரமப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் பக்கத்து பெட்டுகளில் யாரும் இல்லாத நேரத்தில் மருத்துவமனை வார்டில் உள்ள கட்டில் கம்பியில் புடவையால் கழுத்தை சுற்றி நெரித்து கொண்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து தனலட்சுமியின் தம்பி கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.