கரூரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

கரூரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-09-12 03:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், வெள்ளியணை, பசுபதிபாளையம் மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களில் பதிவான பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய, கரூர், தாந்தோணிமலை பகுதியைச் சேர்ந்த வைரப் பெருமாள் மகன் செல்வம் என்கிற செல்வராஜ் வயது 36 என்பவரையும், கரூர், பசுபதிபாளையம், அருணாச்சல நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சிவக்குமார் வயது 23 ஆகிய இருவரையும் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட இருவர் மீதும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும் இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் அடைத்த, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறு செய்து, பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல் எச்சரித்துள்ளார்.

Similar News