பழைய சிறுவங்கூரில் கபடி போட்டி

போட்டி

Update: 2024-09-12 04:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தில் விநாயகா பிரதர்ஸ் அணி சார்பில் 5ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம், 4ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்ற நாட்கள் நடந்த இப்போட்டியில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இறுதியில் அணைகரைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த அணி முதல் பரிசை தட்டி சென்றது. மேலும், பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த அணி இரண்டாம் பரிசையும், சூ.ராயபுரம் கிராமத்தை சேர்ந்த அணி 3வது பரிசையும், சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த அணி 4ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பால்ராஜ் மற்றும் முக்கியஸ்தர்கள் பரிசுத்தொகை, கோப்பைகளை வழங்கினர்.

Similar News