குண்டடம் கிளை கால்வாய்க்கு சமச்சீர்ப பங்கீடு முறையில் தண்ணீர் வழங்க வேண்டும்

பல்லடம் பொதுப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாசன விவசாயிகள்.

Update: 2024-09-12 05:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் 1000 க்கும் மேற்பட்ட கிளை கால்வாய் பாசன விவசாயிகள் உள்ளனர்.இவர்கள் கிளை கால்வாயில் திறக்கப்படும் பாசன நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இன்னிலையில் குண்டடம் கிளை கால்வாய்க்கு சீராக நீர் வழங்கப்படுவதில்லை.சில நேரங்களில் இரண்டு நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது.இதனால் விவசாயிகள் தண்ணீர் வசதி இல்லாமல் கடும் பாதிப்படைகின்றனர்.எனவே மற்ற பகுதிகளுக்கு 7 நாட்கள் வழங்கப்படுவது போல குண்டடம் கிளை வாய்க்காலுக்கு 7 நாட்கள் நீர் வழங்க வேண்டும் என கூறி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து அவர்களிடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்த தண்டபாணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது விவசாயிகள் அனைத்து வாய்க்கால்களுக்கும் 7 நாட்கள் நீர் வழங்கும் போது எங்களுக்கு மட்டும் ஏன் 5 நாட்கள் நீர் வழங்குகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய உதவி செயற்பொறியாளர் இது குறித்து மனு அளியுங்கள் உயரதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க போவதாக கூறியதை அடுத்து அவரிடம் மனு வழங்கிய விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Similar News