ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
Update: 2024-09-12 08:43 GMT
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் திரு.காந்திராஜன்.MLA ஆய்வு செய்த போது
காஞ்சிபுரம் மாவட்டம்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி இன்று (12.09.2024) காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் திரு.காந்திராஜன்.MLA அவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப. ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.