தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரப்பாக்கம், எலப்பாக்கம், ஒரத்தி, தொழுப்பேடு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் தம்பு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமிகோவிந்தராஜ், திமுக மாவட்ட நிர்வாகிகள் பொன்மலர்சிவகுமார், கருணாகரன், மோ.கோ.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.