எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சபீஸ் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.,
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி விவசாய தோட்டத்தில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் - தப்பியோடிய இருவரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் கைது ஒருவர் தற்கொலை.,
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி விவசாய தோட்டத்தில் 4500 லிட்டர் எரிசாராயத்தை தமிழக போலீசார் உதவி உடன் கேரள போலீசார் பறிமுதல் செய்தனர் - தப்பியோடிய இருவரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் கைது ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்., பொள்ளாச்சி.,செப்டம்பர்.,12 தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் டோனி இவருக்கு சொந்தமான விவசாய மாந்தோப்பு பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள செமணாம்பதி கிராமத்தில் உள்ளது., இவரது தோட்டத்தை கேரளாவைச் சேர்ந்த சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்., இந்நிலையில் இவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக எரி சாராயம் பதிக்க வைத்திருப்பதாக கேரள மாநில கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது., இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழக போலீசார் உதவியுடன் கேரள மாநில கலால் துறை துணை கமிஷனர் தலைமையிலான குழு இவரது தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர் அப்போது அங்கு தோட்டத்தில் கேன்கள் வைத்திருப்பது தெரியவந்தது அந்த கேன்களை சோதனை செய்ததில் முழுவதும் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 35 லிட்டர் பிடிக்கக்கூடிய 150 கேன்களில் சுமார் 4500 லிட்டர் எரி சாராயம் இருந்ததும் தெரியவந்தது., இதனை அடுத்து தோட்டத்து உரிமையாளர் டோனி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிடிபட்ட எரி சாராயத்தை கேரளா மாநில போலீசார் தமிழக எல்லை பகுதியில் உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்., மேலும் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தப்பி ஓடிய சபீஷ் என்பவரை ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள அவரது தோட்டத்தில் சபீஷ் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்., இதைத் தொடர்ந்து கேரளா கொல்லம் எரிய போலீசார் சபீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேரளா மாநில பாலக்காடு ஜில்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்., மேலும் தோட்டத்தின் உரிமையாளரான டோனியை ஆனைமலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., ம.சக்திவேல்.பொள்ளாச்சி..9976761649.,