திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்பாட்டம்

Update: 2024-09-12 11:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மல்லப்பள்ளிகிராமத்தில் சுற்று வட்டார சுற்று சூழலை பாதுக்காக்க கல் குவாரி ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மல்லப்பள்ளி கிராமத்தில் சுற்று வட்டார சுற்று சூழலை பாதுக்காக்க கல் குவாரி ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு சிபிஐ முருகேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன கல்குவாரிகள் அமைப்பதால் காடுகள் மரங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்திடு விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுத்திடு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் நீர் மாசு அடைவதை தடுத்திடு பாறைகள் வெடிவைத்து தகர்ப்பதால் ஏற்படும் நில அதிர்வுனால் வீடுகள் பள்ளிக்கூடங்கள் பாதிக்கப்படுவதை தடுத்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் தமிழக மாவட்ட செயலாளர் முல்லை மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News