கே.எஸ். ஆர் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை
கே.எஸ். ஆர் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. செண்டா மேளம் முழங்க அத்தப்பூ கோலமிட்டு துவங்கிய விழா கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மா கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் திட்டஅலுவலர் முனைவர் பாலுசாமி மற்றும் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் மோகன் மற்றும் துணைமுதல்வர், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இளங்கலை இரண்டாமாண்டு கணிணிஅறிவியல் துறையைச் சார்ந்த மாணவி யோ. மோனிகா வரவேற்புரை வழங்கினார். ஓணம் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து ஓணம் பண்டிகையின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கதக்களி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளங்கலை இரண்டாமாண்டு கணிணிஅறிவியல் துறையைச் சார்ந்த மாணவி நித்யஸ்ரீ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கேரள மாநில பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழா இனிதே நிறைவுற்றது.