ஆண்டிபட்டி அருகே எம் .சுப்புலாபுரத்தில் தாய் மகள் காணவில்லை என புகார்
M. சுப்புலாபுரத்தை சேர்ந்த பொன்மணி என்பவர் தனது மகள்களுடன் காணவில்லை என புகார்
ஆண்டிபட்டி அருகே எம் .சுப்புலாபுரத்தில் தாய் மகள் காணவில்லை என புகார் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் கண்டமனூர் பகுதியில் மரிக்குண்டு அருகே எம் சுப்புலாபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி இவருடைய மகள் பொன்மணி என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக பொன்மணி தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது .பொன்மணி இரண்டு குழந்தைகள் உடன் திடீரென காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்