விஷம் குடித்து தொழிலாளி சாவு
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோ.பவழங்குடி, தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுப்பிரமணியன் (84). வயிற்று வலியால் மிகுந்த அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள முனியப்பர் கோயில் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனையறிந்த அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, சுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.