குளிர்பானம் குடித்து மயங்கிய சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

குளிர்பானம் குடித்து மயங்கிய சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2024-09-12 18:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் - கிருஷ்ணவேணி தம்பதியரின் மகன் ஜெகதீஷ் (வயது 8 ). இவர் சாத்தப்பாடி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தந்தை இல்லாததால் தாய் தான் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பானம் ஒன்று வாங்கி குடித்துள்ளார். அப்போது குடித்த 10 நிமிடத்தில் அந்த சிறுவன் மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பெற்று குணமடையாததால் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெகதீஷின் தாயார் கூறிய போது எனது பிள்ளை எழுந்து கூட நடக்கவில்லை. வாந்தி மயக்கம் தலைவலி பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த விபரீதம் இனி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இச்ம்பவம் குறித்து கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News