விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தேசியக்கொடியை ஏந்தி தம்பதியினர் போராட்டம்

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தேசியக்கொடியை ஏந்தி தம்பதியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2024-09-12 18:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் பாலசுப்பிரமணியன் (58). இவரது மனைவி (48). இருவரும் தற்போது திருவையாறு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 52 சென்ட் நிலம் சொந்தமாக இருந்து வருகிறது. இதனைப் உட்பிரிவு செய்து தனி பட்டாவாக வழங்க வேண்டும் என பாலசுப்பிரமணியன் விருத்தாசலம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் மற்றும் விருத்தாசலம் கோட்டாட்சியர் என அனைத்து இடங்களிலும் கோரிக்கை மனு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் பதில் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் விருத்தாசலம் தாசில்தார் அலுவலகம் சென்று பாருங்கள் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தனது மனைவி சாந்தியுடன், விருத்தாசலம் தாலுக்கா அலுவலகம் முன்பு தேசிய கொடியுடன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தாசில்தார் அலுவலகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு அமர்ந்திருந்தார். இதனை அறிந்த துணை தாசில்தார் கோவிந்தன் மற்றும் வருவாய் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் மனு மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது விசாரணை முடிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தேசியக்கொடியுடன் தாலுகா அலுவலகம் முன்பு தம்பதியர் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News