நாளை ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்

முகாம்

Update: 2024-09-13 03:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வாணாபும் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நாளை (14ம் தேதி) நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் இம்முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், செல்போன் எண் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வாணாபுரம் தாலுகாவிற்குட்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News