வெலக்கநாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எறிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேன் வியாபாரி
வெலக்கநாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எறிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேன் வியாபாரி
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கநாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எறிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேன் வியாபாரி சென்னை பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்திரன் மகன் அபி நரசிம்மன் (52) இவர் தேன் வியாபாரம் செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமாக மேட்டூரில் அலுவலகம் உள்ளது. இதன் காரணமாக தினம் தோறும் தேன் வாங்கிக் கொண்டு மேட்டூரிலிருந்து சென்னைக்கு சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் வழக்கம்போல் அபிநரசிம்மன் தனது இண்டிகோ காரில் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது வெலக்கல்நாத்தம் பைனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது இதனால் சுதாரித்துக் கொண்ட அபி நரசிம்மன் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி உள்ளார் பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தகதகவென தீ பற்றி எறிந்தது. இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அனைத்தனர் மேலும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீ பற்றி எறிந்ததால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்