ஆண்டிபட்டி அருகே சாலையினை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
ஜி உசிலம்பட்டியில் இருந்து ராஜதானிக்கு செல்லும் மாற்று பாதை சேதமடைந்துள்ளது இதனை சரி செய்ய கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் ராஜதானி அருகே ஜி உசிலம்பட்டி கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் இருந்து ராஜதானி கதிர் நரசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையானது சித்தார்பட்டி மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. மேலும் g .உசிலம்பட்டியில் இருந்து ராஜதானி கதிர்நரசிங்கா புரம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மாற்று பாதை உள்ளது.இந்த சாலை தற்பொழுது சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது .மிகவும் சேதம் அடைந்த இந்த சாலையினை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்