வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுவியை பலாத்காரம் செய்தவர் கைது
போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மு. பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ் மகன் செந்தில்குமார் (24). இவர் கடந்த 10 ம் தேதி அன்று அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரின் மகளான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் செந்தில்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.