வயநாட்டில் ஏற்பட்ட சீரழிவுக்கு காரணம் மனிதர்களே
திண்டுக்கல் திருப்பதி வெங்கடாஜலபதி மகாலில் நடைபெற்ற நிகழ்வில் வயநாட்டில் ஏற்பட்ட சீரழிவுக்கு காரணம் மனிதர்களே இயற்கை கிடையாது என ரோம் நகர் வாட்டிக்கண் நீதிமன்ற நீதிபதி பேச்சு
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன் சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில் ஆசிரியர் தின விழா, மருத்துவர் தின விழா, வழக்கறிஞர் தின விழா, மற்றும் சுற்றுச்சூழல் தின விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அரசால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாடிகன் உச்ச நீதிமன்ற நீதிபதி சேவியர் லியோ ஆரோக்கியராஜ் அவர்கள் பேசும் பொழுது..., பாரதத் தாயை வணங்குகிறோம் என்று அனைவரும் வெறும் வாயால் கூறுவது உண்மையில் மரியாதை செய்வதல்ல. நம்முடைய இயற்கை வளங்களை அழிக்காமல் அதனை பாதுகாத்து பெருக்கி இயற்கை வளங்களை அளிக்காமல் உருவாக்கியதை பாரத தாய்க்கு மரியாதை செலுத்துவதாகும். மேலும் வயநாட்டில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் மனித பிழை மட்டும்தான். காரணம் அங்கு இருக்கக்கூடிய மரங்கள் வெட்டப்பட்டன இதனால் மனிதர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு வையுங்கள் காரணம் அப்போதுதான் நமக்கு தூய்மையான காற்று கிடைக்கும் மழை பெய்யும் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ முடியும் அதன் பிறகு தான் நாம் சேர்க்கக்கூடிய பொருட்செல்லும் அறிவிச்செல்வம் ஆகியவை பிள்ளைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் இருக்க முடியும். ரோம் நகரில் இருக்கக்கூடிய மக்கள் தொகையின் எண்ணிக்கை இரண்டரை பில்லியன் மேலும் அங்கு இருக்கக்கூடிய கார்களின் எண்ணிக்கை 5 பில்லியன் சராசரியாக ஒரு நபருக்கு இரண்டு கார்கள் என்ற விதத்தில் உள்ளது இதன் எதிரொலி அங்கு காற்று மாசுபாடு ஏற்பட்டு அங்கு இருக்கக்கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ளது. ஒரு மனிதன் ஒவ்வொரு வருடமும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு அளவுக்கு பிளாஸ்டிக் நம் வயிற்றுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக கேன்சர் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுகின்றன. மேலும் தண்ணீர் மாசுபட்டு குடிக்க முடியாமல் பாட்டில் தண்ணீரை எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு அலைகறோம் . இனி வரும் நாட்களில் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து விற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் 8 மரக்கன்றுகளை நட்ட பின்னரே அரசிடம் அனுமதி பெற்று வெட்ட முடியும் ஆகவே அதுபோன்ற கடுமையான சட்டங்கள் நம் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.