யாரும் சிகரெட், மது குடிக்காதீர்கள் ஆதீனம் பேச்சு

யாரும் மது குடிக்காதீர்கள், சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள் - மதுரை ஆதீனம் பேச்சு

Update: 2024-09-14 05:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் மதுரை ஆதீனம் "ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி" கலந்து கொண்டுள்ளார் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் நான்கு முக்கிய வீதியில் வழியாக கோட்டைகுளத்தை அடைந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. பின் மதுரை ஆதீனம் விழாவில் பேசும்போது, "இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல்லில் பிறப்பது புண்ணியம். 20 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை வைக்க நான் வந்தேன். பால கங்காதர திலகர் தான் விநாயகர் சதுர்த்தியை ஆரம்பித்து வைத்தது. அவரவருக்கு அவரவர் சமயம் உயர்வு. நம்முடைய சமயத்தில் வருடம் முழுவதும் திருவிழா நடக்கிறது. அபிராமி அம்மன் சிலை வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது அதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன் - அதைச் சொன்னார் இதை சொன்னார் என்று என்னை ஆட்டைய போட்டு விடுவார்கள் நம்ம மக்களும் பைசா கொடுத்தால் நைசாக போட்டு விடுவார்கள். திருந்த மாட்டார்கள். சீமானும் அதைத்தான் சொல்கிறார். பழனி மாநாடு சென்றதும் இரண்டு கோரிக்கைகளை வைத்தேன். மதுவை நிறுத்துங்கள், சிகரெட்டை நிறுத்துங்கள் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் யாரும் போகாதீர்கள். நீங்கள் போவதால்தான் அவர்கள் கடையை திறக்கிறார்கள். அரசாங்கத்தை நான் குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்கு வருமானம் தேவை அதனால் டாஸ்மாக்கை திறந்து வைக்கிறார்கள். காமராஜர் படிக்கச் சொன்னார் நான் அவ்வளவுதான் சொல்வேன். (ஒன்று என்றால் இரண்டு என்று கூறி விடுவார்கள்) படித்த இளைஞர் நடுரோட்டில் குடித்து கிடைக்கிறார். அவரை காப்பாற்ற வேண்டும் என தோன்றுகிறது மறுபக்கம் பயமாக இருக்கிறது. இளைஞர்கள், வயதானவர்கள் குடிக்கு அடிமையாகியிருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது. அப்பாவும் மகனும் டாஸ்மாக் கடைகளுக்கு செல்கின்றனர் மகன் பாஸ் மார்க் எடுக்கிறானோ இல்லையோ டாஸ்மார்க் செல்கிறான். இதற்கு நாம் தான் காரணம் அரசாங்கத்தை நான் குறை சொல்ல மாட்டேன். மாமிசம் சாப்பிடாதீர்கள். சைவமாக மாறுங்கள். எத்தனையோ அமைச்சர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் தி.மு.க., அமைச்சர் சேகர்பாபு காவி வேஷ்டி கட்டி வந்தது நமக்கு வெற்றி தான். என்னுடைய பழைய பெயர் பகவதி பாபு அவருடைய பெயர் சேகர்பாபு இருவரும் ஏன் சேர்ந்தோம் குத்தகை கொடுக்காதவர்களுக்கு ஆப்பு வைக்க - காப்பு கட்ட சேர்ந்துள்ளோம். சுயநலம் காரணமாகவே சேகர்பாபு உடன் சேர்ந்துள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திருமாவளவன் மற்றும் தி.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநாடு நடத்துகிறார்கள் என்றால் நம்மை நெருங்குகிறார்கள் என்று அர்த்தம். நான் அவரிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். நம்முடைய ஹிந்து கோயில்களின் நிலங்கள் பலரிடம் சிக்கி உள்ளது அதை மீட்க வேண்டும். இதே போல அபிராமி அம்மன் கோயிலையும் மலைக்கோட்டையில் கட்ட வைப்போம். ஆதீனங்கள் தான் தமிழை வளர்த்தது. மக்கள் கையில்தான் எல்லாம் உள்ளது. அரசாங்கத்தை நேராக எதிர்க்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். யாரும் மது குடிக்காதீர்கள், சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள். தி.மு.க., அரசு வள்ளலார் நிகழ்ச்சியை நடத்தியது பெரிய விஷயம். அதேபோல் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதும் பெரிய விஷயம் தான். மன்னனை திருத்திய பெருமை மதுரை ஆதீனத்திற்கு உள்ளது. அமைச்சர் பிரியமானவராக இருக்கிறார் அதனால் அவரை அனுசரித்து சென்று நமது கோரிக்கைகளை வைப்போம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. சமீபத்தில் விருதுநகரில் காவல் பெண் அதிகாரி ஒருவரை நபர் ஒருவர் தாக்கியதை பார்த்து மனம் வேதனை அடைந்தேன். மக்களுடைய ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் போய்விட்டது. காவல்துறையை பாதுகாக்க வேண்டும். காவல்துறையை யாரும் திட்டக்கூடாது. தமிழக காவல்துறையை போல் உலகில் எங்கும் இல்லை. தமிழக அரசிடம் மோதலாக செல்லாமல் காதலாக செல்வோம்" என தெரிவித்தார்.

Similar News