ஆண்டிபட்டி அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
இருசக்கர வாகனத்தை இயக்கிய பால் வியாபாரி செல்லத்துறை அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
ஆண்டிபட்டி அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் - இருசக்கர வாகனத்தில் வந்த பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!!* அரசு நகர பேருந்தின் முன்பக்கத்தில் ஒரு முகப்பு விளக்கு இல்லாமல் இயக்கப்பட்டது விபத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. தேனி மாவட்டம் ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு இயக்கபட்ட அரசு நகர பேருந்து ஒன்று மேக்கிழார்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே பால் கேன்களோடு வந்து கொண்டிருந்த பால் வியாபாரி செல்லத்துறையின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது இதில் இருசக்கர வாகனத்தை இயக்கிய பால் வியாபாரி செல்லத்துறை அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனம் அரசு நகரப் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பால் வியாபாரி செல்லதுறையின் உறவினர்கள் ஆத்திரத்தில் ஆண்டிப்பட்டி- ஏத்தகோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அரசு நகரப் பேருந்தில் முன்பக்க முகப்பு விளக்குகளில் ஒருபுறம் விளக்கு எரியாததே விபத்திற்கு காரணம் என்று கூறி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். தப்பி ஓடிய அரசு பேருந்தின் ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வாக்குவாதம் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து உயிரிழந்த செல்லத்துறை உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....