குளித்தலை டிஎஸ்பி இடம் புகார் மனு

ஊர் பொதுமக்களுடன் திரண்டு வந்ததால் பரபரப்பு

Update: 2024-09-14 10:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்தில் காணியாளம்பட்டி அடுத்த வேப்பங்குடியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் வேப்பங்குடியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் கடந்த 8 ஆம் தேதி அன்று காணியாளம்பட்டி பேக்கரியில் தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த சிலர் பைக்கில் ரேஸ் செய்ததை கேட்டு திட்டி தாக்கியுள்ளனர். மேலும் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் பேக்கரியில் தாக்கி கொண்டுள்ளனர். சிசிடிவி யில் பதிவான ஒரு காட்சியை மட்டும் வைத்து வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி ஒரு தலைப்பட்சமாக வேப்பங்குடி இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் தலைமையில் குளித்தலை டிஎஸ்பி (பொறுப்பு) கல்யாண குமாரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.

Similar News