கே.எஸ். ஆர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி 2024. கே.எஸ். ஆர் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையின் மூலம் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் கற்றல் (ஏ.டி.ஏ.எல்)அகாடமியுன் கீழ் ஆற்றல் மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான பயன்பாடுகள் : ஒரு தொழில்நுட்ப புரட்சி என்ற தலைப்பில் செப்டம்பர் 09 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியானது ஏ.ஐ.சி.டி.இ யின் ரூ.3.50 லட்சம் நிதியுடன் நடைபெறுகிறது. இதற்கான ஏ.ஐ.சி.டி.இ ஆணையை .கே.எஸ். ஆர் பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு.சீனிவாசன் கே.எஸ். ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர். வெங்கடேசன், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை தலைவர் முனைவர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோரிடம் வழங்கினார்.