விசிக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Update: 2024-09-15 04:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ.மகாமுனி (எ) வன்னியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த வைரப் பெருமாள் திமுகவை சேர்ந்த ரமேஷ் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News