திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
கீழவலம் திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தார்
கீழவலம் திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாய திருவாலீஸ்வரர் கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது.. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி புதிதாக கட்டியுள்ள கோவில்களில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும், அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கிராமத்தின் வீதிகளில் வண்ணத் தோரணங்கள் விளக்குகள் வாழை மரங்கள் கட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவானது வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மங்கல இசை முழங்க தொடங்கிய நிகழ்ச்சியில்,விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாகவாசனம், லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோபூஜை, கணபதி பூஜை, பூரணாதி, ஆகிய நிகழ்ச்சிகளை சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்து பூஜை செய்தார். நேற்று மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மருத் சங்கரணம், கும்ப கலச அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக தினமான இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை உடன் இரண்டாம் கால யாக பூஜை, நாடி சாந்தினம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 9 மணி அளவில் கோவில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவரும் மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களின் மகனும் மான கோ.ப.அன்பழகன் கலந்து கொண்டு கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித நீரையும் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் கிராம மக்களும் செய்து வருகின்றனர்.