நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் ஜி.மாதையன், முதல்வா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவிகள் வண்ணப்பூக்களால் கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடை அணிந்து ஆடிப்பாடி ஓணத்தை வரவேற்றனா்.

Update: 2024-09-15 15:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேரளா மக்களால் சாதி மத வேறுபாடு இன்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை கேரளத்தின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.மலையாள ஆண்டில் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்பது ஐதிகம்.கேரளம் மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டப்பட்டது, இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்களில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை மாணவ, மாணவிகள், கொண்டாடி மகிழ்ந்தனா். நாமக்கல்- இராமபுரம் புதூரில் உள்ள ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகையில் கல்லூரி இயக்குநா் ஜி.மாதையன், முதல்வா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவிகள் வண்ணப்பூக்களால் கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடை அணிந்து ஆடிப்பாடி ஓணத்தை வரவேற்றனா்.இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அத்த பூ கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ,நடன நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News