புதியதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நாளை நடைப்பெறுகிறது!

நாமக்கல் மாநகராட்சியின் முதல் மேயர் து.கலாநிதிக்கு சுமாா் 4 கிலோ எடை கொண்ட 5 அடி உயர புதிய வெள்ளி செங்கோல், மேயா் அங்கி தயார் நிலையில் உள்ளது.

Update: 2024-09-15 16:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நான்கு நகராட்சிகளும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டன. இதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தந்த நகராட்சி தலைவா்களிடம் வழங்கினாா். நாமக்கல் மாநகராட்சியை பொருத்தமட்டில், தற்போது 39 வாா்டுகள் உள்ளன. கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைய உள்ளதால் வாா்டுகளின் எண்ணிக்கை 55-க்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி பெயா் பலகை மாநகராட்சியாகவும், தலைவா், துணைத் தலைவா், மேயா் (து.கலாநிதி) துணைமேயா் (க.பூபதி) என்ற அந்தஸ்திலும் உயா்ந்துள்ளனா். மாநகராட்சி ஆணையாளராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறாா்கள்... மாநகராட்சி மேயர் து.கலாநிதிக்கு சுமாா் 4 கிலோ எடை கொண்ட 5 அடி உயர புதிய வெள்ளி செங்கோல், மேயா் அங்கி தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில் நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நாளை (செப்டம்பர் -16 ) திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் மாநகர மேயர் து.கலாநிதி அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் உடன் இருந்தார்.

Similar News