திமுக அண்ணாவின் கட்சி கிடையாது: கடம்பூர் ராஜூ பேச்சு!

திமுக அண்ணாவின் கட்சி கிடையாது, கருணாநிதியின் குடும்ப கட்சி என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Update: 2024-09-16 05:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது "கோவை ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் - தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை நீங்கள் ஒதுக்கவில்லை நாங்கள் இதை தோல்வியாக கருதவில்லை, திருக்குறள் மனிதனை வழி நடத்துவது போல அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் வழி நடத்துகின்றன. நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணியில் இருந்த போதுதான், திமுக அண்ணாவின் கட்சி கிடையாது, கருணாநிதியின் குடும்ப கட்சி. தாமிரபரணி - வைப்பாறு நதியிணைப்பு திட்டத்திற்கு அரசாணை போட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் செயல்படுத்தாதது ஏன்? அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை செய்து முடிப்போம். அண்ணாவின் பெயரில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், அண்ணாவின் உருவம் பொறித்த கொடி ஜார்ஜ் கோட்டையில் பறக்க வேண்டும். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில், அதிமுக பேச்சாளர் அய்யா துரைபாண்டியன் சிறப்புரையாற்றினார். விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே. பெருமாள், விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமசந்திரன், புதூர் ஒன்றிய பெருந்தலைவர் தனஞ்செயன், மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி காமாட்சி, நகர செயலாளர் மாரிமுத்து, புதூர் நகர செயலாளர் ஆண்டி, ஜே பேரவை செயலாளர் வரதராஜ பெருமாள், வேல்முருகன், வார்டு கவுன்சிலர் பிரியா, உட்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News