பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தவெக சார்பில் நலத்திட்ட உதவி..

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தவெக சார்பில் நலத்திட்ட உதவி..

Update: 2024-09-16 14:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் மக்கள் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைப்படியும் நல்லாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி,N.ஆனந்த், அவர்களின் உத்தரவு படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன், அவர்களின் ஆலோசனைப்படி வெண்ணந்தூர் பேரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை,லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கட்சிக் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் வரவேற்பு வெண்ணந்தூர் பேரூர் தலைவர் M.V.V.சரவணன், அவர்களின் அவர்களின் முன்னிலையில் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ,நகர, ஒன்றிய,பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Similar News