மணலூர்பேட்டை அடுத்த காங்கேயனுார் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி,40; இவரது மகன் சாரதி,15; நேற்று மூங்கில்துறைபட்டில் நடந்த திருமணத்தை முடித்துக் கொண்டு, இருவரும் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மேலந்தல் அருகே சென்றபோது, கரும்பு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.அதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த சாரதி, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். சத்தியமூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார், விபத்தை ஏற்படுத்தி லாரி டிரைவர் மேலந்தல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்,25; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தந்தை கண் முன்னே மகன் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.