கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். செயலர் கோவிந்தராஜூ, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினர்.மாணவி புவனேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் பேசுகையில், ஆசிரியர் பணி என்பது அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்பதை சுட்டி காட்டியும், மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியராக திகழ வேண்டும் என்றார். உதவி பேராசிரியர் பிரவீனா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜயா, சரோஜாதேவி, நந்திதா, ஜென்சி செய்திருந்தனர்.