காங்கேயம் அருகே உணவக கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சி அழகே கவுண்டன் புதூர் அருகே உள்ள வெள்ளரப்பாறை பகுதியில் உணவுக் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு
காங்கேயம் அடுத்துள்ள வீரணம்பாளையம் ஊராட்சி அருகே உள்ள வெள்ளரப்பாறை பகுதியில் உணவுக் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் தனியார் உணவகத்தினர் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என அழகே கவுண்டன் புதூர் பொதுமக்கள் குற்றசாட்டு கூறிய நிலையில் அவிநாசிபாளையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இருந்து இன்று விலையுயர்ந்த (CHEVROLET CAR) காரில் பேரலில் அடைத்து வைத்திருந்த உணவு கழிவுகள், மாமிச கழிவுகள், மது பாட்டில்கள் கொட்டுவதற்கு 3 உணவக ஊழியர்கள் வந்த போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வாகனத்தை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று அரசு விடுமுறை என்பதால் அதிகாரிகள் விடுமுறையில் உள்ளனர். அதனால் பொதுமக்கள் பிடித்த வாகனத்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது .