உளுந்துார்பேட்டை அருகே கூரியர் பார்சல் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் பார்சல்களை ஏற்றி கொண்டு செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் 45 ஓட்டிச் சென்றார். நேற்று காலை 11 மணியளவில் லாரி உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே சென்ற போது திடீரென லாரியின் பின்புறம் இருந்து புகை வெளியேறியது. டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி பார்த்தபோது லாரியில் உள்ள பார்சல்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீப்பற்றி எரிந்த சில பாசல்களை கீழே தள்ளி தண்ணீரை ஊற்றி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் லாரியில் இருந்த பெரும்பாலான பார்சல்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது. டிரைவர் பார்சல் லாரியை ஓட்டிச் சென்றார். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.