அரிசி ஆலை டிராக்டர் டெய்லர் மோதி தொழிலாளி பலி
அரிசி ஆலை டிராக்டர் டெய்லர் மோதி தொழிலாளி பலி வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் விபத்து குறித்து விசாரணை
முத்தூர் ரங்கப்பையன் காட்டில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் நெல் உலர வைக்கும் எந்திரத்துக்கு தேவையான மரக்கட்டைகளை வெட்டி தரும் வேலை வெளி ஆட்கள் மூலம் செய்யப்படுகிறது. இதற்காக டிராக்டர் அதன் டெய்லரில் இணைத்து கட்டிங் மெஷின் உடன் சேலம் சங்ககிரி சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 20) மற்றும் கூலி தொழிலாளி சுப்பிரமணி (50) ஆகிய இரண்டு பேரும் வந்து வேலை செய்து வந்தனர். 15ஆம் தேதி வேலை முடிந்து விஜயகுமார் டிராக்டர் எடுத்தபோது ட்ரெய்லர் அருகில் நின்று கொண்டு இருந்து சுப்பிரமணியை கவனிக்காததால் ட்ரைலர் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சுப்பிரமணிக்கு கால் நசுங்கியது உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிர் இழந்தார். விபத்தில் பலியான சுப்பிரமணி ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் தங்கியிருந்து தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.